உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸில் ஊற்றி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பால் – ஒரு கிளாஸ்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த மஞ்சள் கலந்த பாலை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி இலைகள் – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் பத்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.
பிறகு துளசி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு பல் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
அதன் பிறகு பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.