நாம் கடந்த காலங்களில் அதிகளவு பயன்படுத்தி வந்த இனிப்பு பொருட்களில் ஒன்று பனங்கற்கண்டு.இது பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள்.நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பனங்கற்கண்டு பயன்பாடு அதிகளவில் இருகின்றது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,வெல்லத்தை ஒப்பிடுகையில் பனங்கற்கண்டில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:-
1)வெங்காய ஜூஸ்
2)பனங்கற்கண்டு
3)தண்ணீர்
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்துக் கொள்ளுங்கள்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு சிறிதளவு பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் கிட்னி கற்கள் கரையும்.
தினமும் காலையில் ஒரு துண்டு பனங்கற்கண்டு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குணமாகும்.பசு நெயில் பனங்கற்கண்டு தூளை போட்டு சாப்பிட்டால் சளி,இருமல் குணமாகும்.
பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் சளி தொந்தரவு குணமாகும்.அதேபோல் பனங்கற்கண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
பனங்கற்கண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.கண் பார்வை திறன் மேம்பட பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிடலாம்.அதேபோல் மிளகு,பாதாம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆஸ்துமா,சுவாசப் பிரச்சனை போன்றவை குணமாகும்.