இரத்த சோகை குணமாக.. இரத்த விருத்தி உண்டாக இந்த கீரையை இப்படி சாப்பிடுங்கள்!!

உங்களில் சிலருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கலாம்.இதனால் இரத்த சோகை பாதிப்பு,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.உடலில் இரத்த விருத்தி அதிகரிக்க நீங்கள் பொன்னாங்கண்ணி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

**சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை
**நெய்
**மிளகுத் தூள்

பயன்படுத்தும் முறை:-

முதலில் சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு பொன்னாங்கண்ணி கீரையை அதில் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.அதன் பிறகு சிறிது மிளகுத் தூளை அதில் போட்டு வதக்கி சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**பொன்னாங்கண்ணி கீரை
**சீரகம்
**பசு நெய்

பயன்படுத்தும் முறை:-

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதற்கு அடுத்து சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.அதற்கு அடுத்து சிறிதளவு சீரகத்தை வறுத்து அரைத்து பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து வதக்க வேண்டும்.இதை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**எலுமிச்சம் பழம்
**தண்ணீர்

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிளாஸில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து விடுங்கள்.இந்த பானத்தை பருகினால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**நெல்லிக்காய்
**தேன்

பயன்படுத்தும் முறை:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிகாய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.

இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு தேன் கலந்து பருகினால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.இரத்த சோகை பாதிப்பு குணமாக இந்த நெல்லிக்காய் பானம் செய்து பருகலாம்.