நம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வரும் மூலிகை இலையான தும்பை பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக உள்ளது.இந்த இலையை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தீர்வு 01:
தும்பை இலை – 10
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு – நான்கு
சுக்கு – ஒரு பீஸ்
திப்பிலி – ஒன்று
அதிமதுரம் – சிறிதளவு
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தும்பை இலை,சீரகம்,,கரு மிளகு ஆகியற்றை போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் சுக்கு,திப்பிலி,அதிமதுரத்தை போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு வடித்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.இந்த பொருட்களை பாலில் காய்ச்சியும் பருகலாம்.
தீர்வு 02:
கருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
தும்பை இலை – ஐந்து
பாத்திரத்தில் கால் தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.அடுத்து அதில் ஐந்து தும்பை இலைகளை போட்டுக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் விஷக் கடி முழுமையாக குணமாகும்.
தீர்வு 03:
தும்பை இலை – ஐந்து
தேன் – சிறிதளவு
முதலில் தும்பை இலையை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி கலக்குங்கள்.
இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
தும்பை இலையை சீரகத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.