நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்கிறது.சுரைக்காய் சாப்பிட்டால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.சுரைக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சுரைக்காய் ஜூஸ் பருகி வந்தால் புளித்த ஏப்பம் வராமல் இருக்கும்.அதேபோல் செரிமானப் பிரச்சனை குணமாக சுரைக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.
சுரைக்காய் – ஒரு கப்
மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சிட்டிகை அளவு
சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி
1.முதலில் ஒரு பிஞ்சு சுரைக்காய் வாங்கிக் கொள்ளுங்கள்.இதனை தண்ணீரில் போட்டு நன்றாக தேய்த்து கழுவுங்கள்.
2.பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு சுரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த சுரைக்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.
3.இந்த சுரைக்காய் ஜூஸை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் கால் தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
4.பிறகு அதில் சிறிதளவு உப்பு கலந்து பருகுங்கள்.இந்த ஜூஸை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து பருகி வந்தால் புளித்த ஏப்பம் வருதல் கட்டுப்படும்.சுரைக்காய் ஜூஸை பருகினால் உடலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.