சேலத்தில் ‘பிகே’ டீம் முகாம்;?அதிமுகவுக்கு மறைமுகமாக வைத்திருக்கும் ஆப்பு?

0
129

தமிழகத்தில் கொரோனாத் தாக்கம் பற்றிய செய்திகள் இன்னும் தலைப்பு செய்திகளாகவே இருக்கின்ற நிலையில் திமுக அணியினர் சத்தமில்லாமல் தமது தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.தேர்தலுக்கு என்று ஏற்கனவே திமுக மற்றும் திமுகவின் தேர்தல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் அணியிலும் டீம் பிரிக்கப்பட்டு,அதில் ஸ்டார் மாவட்டங்கள் ,ஸ்டார் தொகுதிகள் என்று பட்டியலிடப்பட்டு தேர்தலுக்கான பணிகளில் திமுக இறங்கி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டார் தொகுதிகள் எனப்படும் இந்த விஐபி தொகுதிகள் தான் திமுகவின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறதாம்.அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் நிற்க்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு உள்ள தொகுதிகளில், அதிமுகவின் விக்கெட்டை சாய்க்க வேண்டும் என்று சீக்ரெட் உத்தரவும் திமுக தரப்பில் இருந்து போடப்பட்டு இருக்கிறாராம்.

இந்த ஸ்டார் மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக திமுகவினர் குறித்து வைத்திருப்பது எடப்பாடியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம்தானாம். இப்பொழுது அந்த மாவட்டத்தில் திமுகவினர் தேர்தல் பணிகளை துவக்கி இருக்கிறார்கள் என்று செய்திகள் கசிந்துள்ளன.

அதாவது சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன இந்த 11 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு நூறு பேர் என்ற வீதத்தில் 1100 பேர் கொண்ட அணியினரை சர்வே எடுக்க களமிறக்கி உள்ளாதாம் பிகே டீம்.இதனை தேர்தல் வியூகம் என்று சொல்லாமல் ஊரடங்கு காலத்தில் அரசின் செயல்பாடு என்ற பெயரிலேயே சர்வே எடுக்கப்படுகிறதாம்.

இதன் முக்கிய நோக்கம் சேலம் மாவட்டத்தில் நெருக்கடி கொடுத்தால் மற்ற மாவட்டங்களில் எடப்பாடியால் கவனம் செலுத்த முடியாது என்ற கணக்கில் திமுக தற்போது சேலம் மாவட்டத்தில் தனது தேர்தல் பணியை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின்றன.

Previous articleநள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!
Next articleகுஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?