விஜய்க்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியும்! சபாநாயகர் பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!

0
64
Appavu DMK
Appavu DMK

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து திமுக மற்றும் பாஜக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் கூட சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தை எதிர்த்து ஆளும் திமுக கட்சியை எதிர்த்து சென்னையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் விஜய். இந்த கண்டன ஆர்பாட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய்யின் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி திமுக கட்சியை சேர்ந்த சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி கொடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய்க்கு சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் பெயர்கள் கூட சரியாக தெரியவில்லை. யார் அவருக்கு எழுதி கொடுத்து வாசிக்க வைக்கிறார்கள், யார் சொல்லி இப்படி விஜய் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றும் தெரியவில்லை. அமித் ஷாவின் பின்னால் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விஜய்யின் தாயார் ஒரு கிறிஸ்துவர், சிறுபான்மை ஓட்டுக்களை பிரிப்பதற்காகத்தான் அவரை அமித் ஷா களத்தில் இறக்கி இருப்பதாகவும் தோன்றுகிறது என்று அய்யாவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் சபாநாயகர் அய்யாவுவை கடுமையாக விமர்சித்துள்ளார். தாயின் மதம் பற்றி பேசி திமுக ஒரு கரை வேட்டி கட்டிய சங்கி என்ற உண்மையை வெளிப்படுத்தலாமா? விஜய்யின் தாயார் சோபா ஒரு இந்து. அவர் ஒரு கிருஸ்துவராகவே இருந்தாலும் அதிலென்ன தவறு இருக்கிறது? மனிதரை மனிதராக பார்க்காமல் கிறிஸ்துவராக பார்ப்பது சிறுபான்மை விரோத சிந்தனை அல்லவா என்று சபாநாயகர் அய்யாவுவை கடுமையாக விமர்சித்துள்ளார் TVK ராஜ்மோகன்.

Previous articleதிருச்சி சிவா பேச்சால் கொந்தளிப்பில் காங்கிரஸ்! கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முயற்சி! வெகுண்டெழுந்த காங்கிரஸ் கட்சியினர்!
Next articleஅகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு