அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது.
அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு
கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தக் கோர விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா சார்ந்த ஒரு பிரபல இதழ், விமானி தான் இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் வகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அதில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை விமானியே தவறுதலாக ஆஃப் செய்ததாக, அதுதான் விமானம் உயரம் இழந்து விழ காரணமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
AAIB தரப்பு மறுப்பு மற்றும் எச்சரிக்கை
இது தொடர்பாக AAIB இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகாந்தர் கூறியதாவது:
“அமெரிக்க ஊடகங்களில் வெளிவரும் இத்தகைய முழுமையற்ற மற்றும் தவறான தகவல்கள், விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது. தற்போதைய அறிக்கைகள் அனைத்தும் மூல விசாரணை முடிவடையாத நிலையில் உள்ளன. ஆகையால், முழுவதுமான விசாரணை முடிவடையும் வரை ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஊகங்களிலோ அல்லது விவாதங்களிலோ ஈடுபட வேண்டாம்.”
விமானிகள் சங்கம் கண்டனம்
அமெரிக்க ஊடகம் விமானியை குற்றம் சாட்டியது தொடர்பாக, இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. AAIB-ன் முதற்கட்ட அறிக்கையிலும் எந்த விமானியையும் நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்பதை சங்கம் வலியுறுத்தியது.
முதற்கட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ஒரே நேரத்தில் ‘கட் ஆஃப்’ நிலையிற்குச் சென்றதை AAIB குறிப்பிடுகிறது.
கருப்புப் பெட்டியில் பதிவு செய்யப்பட்ட காக்பிட் உரையாடலில், ஒரு விமானி “நீ ஏன் கட் ஆஃப் செய்தாய்?” எனக் கேட்டதற்கு மற்றொருவர், “நான் செய்யவில்லை” என பதிலளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் விபத்துக்கான காரணங்கள் பற்றி இன்னும் தெளிவாகவும், தொழில்நுட்பமாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விமானி மீது குற்றம் சாட்டுவது சரியல்ல: விசாரணை முடிவை காத்திருக்க வேண்டுமென்று AAIB வலியுறுத்தல்
AAIB சுட்டிக்காட்டியது போல, விசாரணையின் இறுதிக் கட்ட அறிக்கையே விபத்துக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தும். தற்போதைய சூழலில் விமானி மீது நேரடியாக குற்றம் சாட்டுவது குறைக்கூடியது அல்ல.
குறிப்பாக, அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி நேரடியாகக் காரணம் என கூறும் சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகள், இந்திய அதிகாரப்பூர்வ அமைப்புகளால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.