ADMK DMDK: அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் சில மனக்கசப்புகள் இருக்கும் வேளையில் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்குமா என்ற கேள்வி உள்ளது. மிகவும் எதிர்பார்த்து எம்பி பதவி தனது மகனுக்கு கிடைக்காத விரத்தியால் மாற்றுக் கட்சியை நாடலாம் என்ற எண்ணத்தில் பிரேமலதா உள்ளார். இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அடுத்த ஆண்டு கட்டாயம் எம் பி சீட் தருவதாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது.
ஆனால் அது ஏற்கும் மனப்பான்மையில் தேமுதிக கிடையாது. இதனிடையே ஸ்டாலினை சந்திப்பதும், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசும் வகையிலும் சில மேடைகள் பிரேமலதாவிற்கு அமைந்தது. இதனையெல்லாம் வைத்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே தவிர வேறு எதுவும் கிடையாது என்று தெரிவித்தார். அதேபோல மற்றொரு பக்கம் விஜய பிரபாகரனும் நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா என்று நக்களாக கூறினார்.
அதேபோல எங்களது கூட்டணி கட்சி யார் என்பது குறித்து மாநாட்டில் தான் கூறுவோம் என்றும் தெரிவித்தார். இது எல்லாம் வைத்து பார்க்கையில் கட்டாயம் இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்பது தெரிந்தது. ஆனால் சமீபத்தில் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் பதிவிட்ட போட்டோவால் மீண்டும் அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து சர்ச்சை பேச்சு எழுந்துள்ளது. அந்த போட்டோவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் பிரேமலதா இருப்பது போல் பதிவிட்டுள்ளனர். இதை வைத்து அனைவரும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, எப்படி ஒரு சூரியன் ஒரு நிலவு ஒரு பூமி இருக்கிறதோ அதே போல் தான் ஒரே ஒரு ஜெயலலிதா. அவர்தான் என் ரோல் மாடல் என்று கூறினார். அதேபோல விஜயகாந்த் புகைப்படத்தையும் மற்றவர்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?? அதற்கு மட்டும் ஏன் தடை செய்தீர்கள் என மேலும் கேள்வியை எழுப்பியுள்ளனர். விஜயகாந்தை குருவாக ஏற்றுக்கொள்ளாமல் அவர்களின் புகைப்படத்தை வேறு விதத்திற்கு பயன்படுத்தி வருவதை தடுக்கும் விதமாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கூறியுள்ளனர்.