சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சமீபத்தில் வீட்டிலிருந்து மாயமானார்.இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தன.
அந்த ஆய்வில் அந்த 20 வயது இளம்பெண் இன்னொரு பெண்ணுடன் காரில் ஏறி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கார் டிரைவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் ஹைதராபாத் சென்ற விவரத்தை கூறி அவர்களின் முகவரியை கொடுத்தார்.
பின்னர் போலீசார்
விசரானைக்காக அங்கு சென்ற போது அதிர்ச்சியடைந்தனர்.காரணம் இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததனர், மேலும் 35 வயது பெண் ஆண் வேடத்தில் இருந்ததார்.இதனைக்கண்ட போலீசார்கள் அதிர்ச்சியடைந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 35 வயது பெண்ணும், 20 வயது பெண்ணும் ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நட்பானார்கள்.இதன்பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஐதராபாத்
வந்துள்ளனர்.
அங்கே அவர்கள் திருமணமும் செய்துகொண்டு அங்குள்ளவர்களுக்கு சந்தேகம்
வராமலிருக்க ஆணை போலவே தன் தலைமுடியை மாற்றிக்கொண்டு ஒட்டு மீசை வைத்து கொண்டு
35 வயது பெண் ஆண் வேடமிட்டு, 20 வயது பெண்ணை தனது மனைவி என்று கூறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
பின்னர் போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார் எவ்வளவோ கூறியும் இருவரும் அவர்களுடன் செல்ல
மறுத்துவிட்டனர் என கூறியுள்ளனர்.