பேரிட்சையின் சத்தும், பயன்களும் முழு தகவல்: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்

0
157

தினமும் 4 பேரிட்சம் பழம் உங்க தொப்பையை வேகமாய்க் கரைக்கும். பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.
அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வார்கள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள்.

அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம். அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை அறிவோம்.

பேரிட்சையில் உள்ள சத்துக்கள் :

கார்போஹைட்ரேட் 44 %,
நார்ச்சத்து 11.5%,
புரதம் 5.6 %,
கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன. இதனை அளவுக்கு மீறி சாப்பிட வேண்டாம். சாப்பிட்ட பின் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள். இப்படி செய்வதால் பல்சொத்தை ஏற்படாமல் இருக்கும்.

> பேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?

வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது. தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும்.

> பயன்படுத்தும் முறை :

ரொம்ப ஈஸி… காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும்.

> பேரிட்சை டயட் :

பேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம்.
இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம். ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள்.

பின் அவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம். அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும்.

> உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் :

பேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது. உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.

> தசை வடிவம் தரும் :

பேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

> சர்க்கரைவியாதி தடுக்கும் :

இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

> நோய் எதிர்ப்பு திறன் :

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். சாதாரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது. சிலருக்கு எத்ற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும். தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.

> இதய பாதுகாப்பு :

இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதரணமாகிப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.

> ரத்த ஓட்டம் :

உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது.
இதனால் எங்கும் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது.தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.

> சிறந்த பேரிச்சை எது.?

பேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது. சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும். அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.

> வாங்கிய பின் செய்ய வேண்டியவை :

வாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும். இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது. தினமும் 4- 6 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை நிச்சயம் குறையும்.

> ஆண்களுக்கு ஏன் நல்லது?

ஆண்களுக்கு வேலைப் பளு, வீட்டுச் செலவு, நெருக்கடியான சூழ் நிலைகள் என பலசவாரி செய்ய வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கட்டாயம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.
இதனால் மன அழுத்தங்கள் குறையும்.
ஆரோக்கியமான மன நிலையில் சிந்திக்கும்படி நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது.

> விந்தணுக்கள் அதிகரிக்கும்:

ஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும் புதிய விந்தணு உற்பத்தி பெருகும்.

> வலியில்லா பிரசவம் :

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் கவலைகளில் ஒன்று பிரசவத்தின் போது உண்டாகும் வலி இன்னொன்று பிரசவத்திற்கு பின் உண்டாகும் பருமன். இரண்டிற்குமே பதில் தருகிறது பேரிட்சை . கர்ப்பம் தரித்தபின் தினமும் 4 பேரிட்சைகளை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தை தருகிறதாம். அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்கிறது.

> மந்த புத்தியை மாற்றும் :

உங்கள் குழந்தைகள் படிப்பு விஷயத்தில் மந்தமாக இருக்கிறார்களா.?

தினமும் 2 பேரிட்சை சாப்பிட வையுங்கள். பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.

Previous article“தம்பி போயி மாஸ்க் போட்டுட்டு வாங்க’ விழிப்புணர்வில் கவனம் ஈர்க்கும் புதிய டெக்னிக்.!!
Next articleஇரவில் ஆந்தை அலறினால் உங்கள் வீட்டில் பணவரவிற்கு பஞ்சம் இருக்காது!!