திருச்சி சிறுமி உயிரிழந்த வழக்கில் உறவினர் ஒருவர் கைது!

Photo of author

By Parthipan K

திருச்சி சிறுமி உயிரிழந்த வழக்கில் சிறுமியின் உறவினர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மோசரம்பெட்டை அருகே உள்ள அவதத்துரர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி என்பவர்.இவருக்கு 14 வயதில் கங்காதேவி என்ற மகள் உள்ளார்.இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 6-ம் தேதி அன்று மதிய வேளையில் அவரது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வீட்டில் உள்ள குப்பைகளை போடுவதற்காக அங்குள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று உள்ளார்.இந்நிலையில் நீண்ட நேரமாகியும் கங்காதேவி வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

அப்பொழுது அங்குள்ள முள் காட்டுப்பகுதியில் கங்காதேவி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை அடுத்து உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் சிறுமி உயிரிழந்த வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் உறவினர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் செந்தில் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.