நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மேலும் அவரது உடல் சாக்குமூட்டையில் கிடந்தது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளது கோட்டுபுள்ளாம்பாளையம்.
இங்கு 30 வயதான குமார் என்கிற குழந்தைவேல் வசித்து வருகிறார்.இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார்.குமார் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இவர் வெகு நேரத்திற்கு பிறகு வீடு திரும்பவில்லை.
இதனை அடுத்து கோட்டுப்புள்ளாம்பாளையம் பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.அந்த சாக்கு மூட்டை சந்தேக படும்படி இருந்ததால் அங்கிருந்தவர்கள் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் பிறகு போலீசார் அங்கு வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்ததில் வெட்டுக்காயங்களுடன் குமாரின் சடலம் கிடந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் இந்த கொலை நண்பர்களுடன் நடந்த தகராறில் நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.