கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இதனால் 2020-21 ஆம் கல்வி ஆண்டு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக பாடங்களை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி அந்த 6 சேனல்களின் அலைவரிசை பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள் இன்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு டிவி மூலம் பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு கல்வித்தொலைக்காட்சியில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும்.இதனை மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கவனித்து கற்றுக்கொள்ளலாம்.மேலும் இந்த தொலைக்காட்சி குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே வெளியிடப்படும் அதன்படி l TACTV(தமிழ்நாடு அரசு கேபிள் டிவி) அலைவரிசை எண் 200, l SCV-98 l TCCL-200 l VK DIGITAL-55 * AKSHAYA CABLE -17 ஆகிய சேனல்களில் பாடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பு செய்யப்படும்.