தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?

கந்த சஷ்டி கவசம் குறித்து தரக்குறைவாக பேசிய கறுப்பர் என்ற இணைய பக்கத்தில் பேசிய சுரேந்தர் என்பவர் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் அவரை கைது செய்யுமாறு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது. இதையடுத்து தாடி மற்றும் மீசைகளை மழித்துவிட்டு புதுச்சேரியில் சுரேந்தர் சரண்டைந்தார். தமிழக போலீசார் புதுச்சேரி சென்று அவரை வாகத்தில் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரத்திலுள்ள ஈவேரா சிலை மீது காவி வர்ணத்தை மர்ம நபர்கள் ஊற்றியுள்ளனர். கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் எதிராக செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனக்கு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?
இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார், அதனால்தான் அவர் பெரியார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார் தான் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment