தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
190

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நாமக்கல்,நீலகிரி,சேலம்,கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,கரூர்,மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை ஜூலை 18 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்கள் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
நாளை (ஜூலை 18) முதல்
22ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?
Next articleதிமுக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கி குண்டு செய்யும் இயந்திரம்:அதிர்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here