வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

0
144
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது. மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது.
கேப்டன் ஜாசன் ஹோல்டர் 46 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 37 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 65 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 14 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இன்னிங்சில் அவர் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் சாய்ப்பது இது 18-வது முறையாகும்.
Previous articleவிடுபட்ட தேர்வை இன்று எழுதும் பிளஸ் 2 மாணவர்கள்
Next articleதண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம்!