தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் கு. சின்னப்பன் அவர்கள் கூறியதாவது.
2020 – 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகள்,முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் பட்டத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.எனவேத தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு ஆகிய துறையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்
தமிழ் படிக்க விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஐந்தாண்டு முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவா்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இளநிலைப் பட்டம் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.
முதுகலைத் தமிழ் பயிலும் 20 மாணவா்களுக்கும், ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (ஐந்தாண்டு) படிக்கும் 25 மாணவா்களுக்கும் சிறப்பு உதவித் தொகையாகத் தமிழக அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான சேர்க்கை இணையம் வழியாகவும் நடைபெறுகிறது. மாணவா்கள் www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை இணையவழியாக நிறைவு செய்து அனுப்பலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.