கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

0
62

கடன்களை திருப்பிச் செலுத்த ஆர்பிஐ கொடுத்த காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் முடிவடைய உள்ள நிலையில் ,அதனை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கூடாது என எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மார்ச் மாதத்தில், ரிசர்வ் வங்கி மார்ச் 1 முதல் மே 31 வரை அனைத்து கால கடன்களையும் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசத்தை அனுமதித்தது.பின்பு மே 22 அன்று, இதை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

சிஐஐ ஏற்பாடு செய்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கழுக்கான ஒரு கூட்டத்தின் போது, ​​திருப்பிச் செலுத்தக்கூடிய பல நிறுவனங்கள் கால திட்டிப்பு திட்டத்தின் மூலம் தேவையற்ற பயனைப் பெறுவதால் வங்கிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.இதனால் தயவுசெய்து தடையை நீட்டிக்க வேண்டாம் என்றார். இதனால் பணம் செலுத்தும் திறன் கொண்ட நபர் கூட இந்த திட்டத்தால் அவர்களுக்கு சதகமாக அமைவதாக அவர் குற்றச்சட்டை முன்வைத்தார்.

மூன்று மாதங்களுக்கு மற்றொரு நீட்டிப்பு இருக்கும் என்று சில பேச்சுக்கள் உள்ளதால், இதனை செய்ய வேண்டாம் என்று கூறினார். மேலும் இதனால் சிறிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த கருத்துக்கு வங்கி ஆளுநர் தீபக் பரேக் எந்த பதிலும் தற்போது அளிக்க இயலாது என்று கூறி பேச்சை முடித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வர்த்தகம் வழக்கம் போல் இல்லாததாலும், கொரோனா தொற்றுநோயால் வருமானம் போக்குவரத்து சீர்குலைந்து தவித்து வருவதாலும், இந்த நீட்டிப்பினை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கைகள் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra