இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு

0
75
கொரோனா எளிதில் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “  புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்.
புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக  உள்ளது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில்  துப்பும் போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.