குழப்பத்தில் உள்ள பாஜக

0
284
சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது என்று சந்திரகாந்த் பாட்டீல் குழந்தைத்தனமாக அறிக்கையை வெளியிடுகிறார். சில பா.ஜ.க. தலைவர்கள் சிவசேனாவை விமர்சிக்கும்போது, அந்த கட்சியுடன் சிவசேனா இணைவதன் மூலம் மாநிலத்திற்கு எவ்வாறு நன்மைகளை வழங்க முடியும்? சிவசேனா தலைமையிலான தற்போதைய மகா விகாஷ் அகாடி அரசாங்கம் இந்த மாநிலத்தின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தை குதிரை பேரம் மூலம் கவிழ்க்க முடியாது என்பதால் பா.ஜ.க. குழப்பம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
Previous articleஅதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்
Next articleஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here