மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்?

Photo of author

By Parthipan K

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூர் , அடைப்பாறு தலைப்பு அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.

கடந்த பிப்ரவரி மாதமே கடையை திறக்க முடிவு செய்த நிலையில்,அரசுப் பள்ளி மாணவியர் விடுதி , குடியிறுப்பு பகுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை மதுக்கடைக்கு அருகே அமைய இருப்பதால் இதனை தவிர்க்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, ஜூலை மாதம் 18 மற்றும் 30 ஆம் தேதிகளில் மீண்டும் மதுக்கடையை திறக்க முடிவு செய்தபோது, மதுக் கடையை திறக்க எதிர்ப்பு கோரி போராட்டம் நடத்தினர். மற்றொரு தரப்பில் திறக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்.இதனால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது .

பின்பு காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தினர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு முடிவு எடுக்கப்படும் வரை திறக்கப்பட மாட்டாது என கூறினர். இதுவரை டாஸ்மாக் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டூரில் மதுக்கடை இல்லாததால், மதுவை வாங்க பக்கத்து ஊருக்குச் செல்வதாகவும், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதாகவும், டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பதாகவும் , சிலர் சட்ட விரோதமாக எடுத்து வந்து அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்த வண்ணம் உள்ளது.

இதனால் கோட்டூரில் அடப்பாறு தலைப்பிலேயே டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே, அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வர்த்தக சங்கத் தலைவர் எம்.துரைராஜ் தலைமை நடத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமியை சந்தித்துக் கோரிக்கை மனுவினை அளித்தனர்.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும், நூற்றுக்கும் மேற்பட அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மதுக்கடையை திறக்கக் கோரி மனுவை தந்தனர்.