இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

0
162

இதற்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?
விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

பொதுவாக நம்மில் பலருக்கு எந்த மூலிகை எதற்கு பயன்படும் என்று தெரியாது. நம் கண்ணுக்கு எதிரே இருக்கும் ஆனால் இதன் மகத்துவத்தை பற்றி நாம் அறியாத ஒன்று.

அப்படிப்பட்ட மூலிகைதான் சிறியாநங்கை.
இதற்கு இரண்டு பெயர்கள் இருக்கிறது சிறியா நங்கை பெரியா நங்கை. இதன் இலைகள் மிளகாய் செடியை போன்று இருக்கும்.
பொதுவாக கிராமப்புறங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும் போது கீரி கடி பட்டால் ஓடிப்போய் ஒரு மூலிகையை உண்ணுமாம் அதுதான் இந்த சிறியாநங்கை.
சிறியாநங்கை செடியை வீட்டில் ஓரங்களில் நட்டு வைத்தால் பாம்புகள் எட்டிக்கூட பார்க்காது. ஏனென்றால் சிறியா நங்கை இலை மீது பட்ட காற்று பாம்பின் மேல் படும் பொழுது பாம்பின் செதில்கள் சுருங்கி விரியாதாம் அதனால் பாம்புகள் இதை பார்த்தாலே அஞ்சுமாம்.

பாம்பு மற்றும் தேள் கடிக்கு:

பொதுவாக பாம்பு அல்லது தேள் கடித்தால் சிறியாநங்கை இலைகளை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். இது உடலில் உள்ளே சென்று விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம்.

சிறியாநங்கையின் இலை,வேர்,பூ அனைத்தும் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை.அக்காலத்தில் காட்டில் வேட்டைக்குச் செல்லும் பொழுது வீரர்கள் சிறியாநங்கை இலை உன்று விட்டு செல்வார்கள். ஏனென்றால் எந்த விஷ பூச்சி கடித்தாலும் விஷம் ஏறாது.

உடல் வலுப்பெற:

இந்த சிறியாநங்கை இலைகளை பறித்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவிற்கு காலையில் உண்டுவர உடல் வலுப்பெறும்.
அதேபோல் சிறியாநங்கை இலையை வெயிலில் காயவைத்து பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து காலையிலும் மாலையிலும் இரண்டு முன்று கிராம் சாப்பிட்டு வர பெண்களே இச்சை கொள்ளும் அளவிற்கு தேகம் வலுப்பெறும்.

சர்க்கரை நோய்க்கு:


சிறியா நங்கை இலை பொடி, நெல்லி முள்ளி பொடி, நாவல் கொட்டை பொடி, வெந்தயப் பொடி, சிறுகுறிஞ்சான் பொடி அனைத்தையும் சம அளவில் எடுத்து ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் சர்க்கரை நோய் விரைவில் குணமடையும்.

மேலும் இது தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. பத்தியத்தின் போது கத்தரிக்காய் மட்டும் சாப்பிடக்கூடாது.
மஞ்சள்காமாலை, நீரிழிவு நோய், மலேரியா, விஷக்காய்ச்சல் மற்றும் வாதம் ஆகிய பல நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.சிறியாநங்கை இலைகளை அரைத்து அதனுடன் எலுமிச்சை ஜூஸை கலந்து பற்று போட வாதம் உடனடியாக குறையும்.

இவ்வாறு எளிதில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் இந்த மாதிரியான மூலிகைகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

author avatar
Kowsalya