உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்வயம் சேவாக் இன் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஸ்வயம் சேவாக் அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் இந்து மத மடத்தினை சேர்ந்த துறவிகளும் கலந்து கொள்கிறார்கள். இதனடிப்படையில் தலித் சமூக துறவிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு கொடுக்கவில்லை என, ப்ராக்யராஜில் உள்ள தலித் சமூகத் துறவியான மகாமண்டலேசுவரர் சுவாமி ‘கண்ணையா பிரபுநந்தன் கிரி’ குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை மேற்கோள்காட்டி மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், தலித் சமூகத்தின் முக்கிய துறவியாக கருதப்படும் தலித் மகாமண்டலேசுவரர் சுவாமி கண்ணையா பிரபு நந்தன் அளித்த புகாரின்படி, அவரையும் அயோத்தியில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும் எனவும்,
இது நம் நாட்டிற்கு மதச்சார்பற்ற வகையில் இருக்கும் எனவும், சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கமாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதே சம்பவம் குறித்து மற்றொரு ட்வீட்டில், ‘தலித் சமூகத்தினர் சாதியப் பாகுபாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்ற வேண்டும்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.