விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

0
217

திருவாரூர் மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வாழ்க்கை கிராமமத்தை சேர்ந்த வினோத். இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தத நிலையில் கடந்த 6 மாத காலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக 3 மணி நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூரில் இருந்து புதுச்சேரிக்கு 2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவாரூரில் இருந்து புதுச்சேரி செல்ல
சாதாரணமாக 4 மணி நேரம் ஆகும். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்பாக சென்று நோயாளியின் உயிரை காப்பாற்றினார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அல்மூமின். இதனை சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleஅரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!
Next articleஆடி பெருக்கன்று தாலி கயிறை மாற்றுவதால் இவ்வளவு நன்மையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here