அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க!

0
236

அரிசி மாவை வெச்சி இவ்ளோ அழகு குறிப்புகள் இருக்கா? என்னன்னு கொஞ்சம் பாருங்க?

அரிசி மாவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இதை வைத்து அழகு குறிப்பு எப்படி? என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்க்கலாம்!

அரிசி மாவு ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் ஆக பயன்படுகிறது. நான் முகத்தில் நேரடியாக வெயில் படும் பொழுது நம் முகம் கருப்பாக மாறிவிடும். அரிசிமாவை பயன்படுத்தும்பொழுது அரிசியில் உள்ள அமிலங்கள் நம் முகம் கருப்பாவதை தடுக்கும்.

அரிசி மாவை வைத்து என்னென்ன செய்யலாம்! வாருங்கள்!

அக்குளில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க:

1. முதலில் ஒரு bowl -யை எடுத்துக் கொள்ளவும் அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை போடவும்.

2. அந்த அரிசி மாவில் தக்காளி ஜூஸ் ஊற்றவும்.

3. இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்

பின் இந்த கலவையை உங்கள் அக்குள்களில் பூசி அரை மணி நேரம் காய விடுங்கள். இந்த முறை உங்களது அக்குளில் வரும் துர்நாற்றத்தை உடனடியாக நீக்கும்.

முடி பளபளப்பு மற்றும் உதிர்தலுக்கு:

1. இரண்டு கைப்பிடி அரிசியை எடுத்துக் கொள்ளவும்.

2. தண்ணீரில் ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து அந்தத் தண்ணியை எடுத்து உங்கள் தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்து விடுங்கள்.பின் குளித்து விட்டு வெயிலில் முடியை காய வையுங்கள். அதன்பின் உணர்வீர்கள் உங்களது முடி எவ்வளவு பளபளப்பாக மாறியுள்ளது. வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் ஒரே மாதத்தில் உங்கள் முடி பளபளப்பாக ஆகும்.

முகம் வெண்மையாக:

1. முதலில் ஒரு bowl எடுத்து அதில் அரிசி மாவை போட்டுக் கொள்ளவும்.

2. அதில் மூன்று ஸ்பூன் அளவு தயிரை ஊற்றவும்.

3. அறை ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூளை போடவும்.

இந்த கலவையை நன்றாக கலக்கிய உனது முகம் மற்றும் கழுத்துகளில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வரும் பொழுது உங்களது முகம் வெண்மையாக மாறும் மற்றும் வெயிலில் செல்லும் போது முகம் கருப்பாக மாறுவதை தடுக்கலாம்.

ஒளிரும் சருமத்திற்கு:

1.முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவைப் போட்டுக் கொள்ளவும்.

2. ஒரு ஸ்பூன் தேனை ஊற்றிக் கொள்ளவும்

3. 4 ஸ்பூன் பாலை ஊற்றிக் கொள்ளவும்.

நன்றாக கலக்கி அதனை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். இந்த கலவை உங்கள் சருமத்தை ஒளிரும் சருமம் ஆக மாற்றும்.

இந்த அனைத்து முறையும் அரிசிமாவை பயன்படுத்தியே நாம் செய்து கொள்ளலாம். இது மிகவும் எளிமையான முறையாகும்.நீங்கள் வெளியே பியூட்டி பார்லருக்கு சென்று பணத்தை வீணாக்காமல் இந்த மாதிரி வீட்டிலிருந்தே செய்து உங்கள் முகத்தை பளபளப்பாக ஒளிரும் சருமமாகவுகும் மாற்றுங்கள்.

author avatar
Kowsalya