ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபரிடம் நூதன கொள்ளை! 2,50,000 பறிபோன சம்பவம்
தஞ்சாவூரை ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இரண்டரை லட்சம் காலியாக உள்ளது.
தஞ்சாவூரில் ரயில் இன்று நகரில் மரைன் இஞ்சினியரிங் துறையில் பணியாற்றி வந்த ஆயூப் என்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் முறை என்று சொல்லி எடுக்கப்பட்டுள்ளது.
கப்பலில் வேலை செய்து கொண்டிருந்த ஆயூப் கொரோனா பொது முடக்கம் காரணமாக பணி ஏதும் இல்லாததால் தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள ரயில் நகரில் வசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அவரது சேவை தொடங்கப்பட்ட வங்கியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது .பார்த்து அவர் திடுக்கிட்டு உள்ளார். காரணம் அதில் 40 ஆயிரம் தவணை முறை என்று சொல்லி பணம் எடுக்கப்பட்டிருந்தது. இதனை குறித்து அவர் வங்கியில் சென்று கேட்டுள்ளார்.
வங்கியில் சென்று கேட்டு அவருக்கு வங்கி நிர்வாகிகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை . அதனால் தான் சேவை தொடங்கப்பட்ட வங்கியில் இருந்து தனது ஏடிஎம் கார்டை வேண்டாம் என்று சொல்லி கார்டை பிளாக் செய்து விட்டு வந்துள்ளார்.
இவரைப்போலவே ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், பொதுப்பணித்துறை திட்ட அதிகாரி, வடிவமைப்பு கோட்ட கண்காணிப்பாளர் என ஆறு பேரின் வங்கியில் இருந்தும் இரண்டு இலட்சத்திற்கும் மேல் காணாமல் போயுள்ளது.
இவர்கள் 6 பேரும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்குகளை வைத்திருந்தனர் என குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வங்கியில் இருந்து பணம் எடுத்தால் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் OTP வரும் ஆனால் தற்போதும் அதுவும் வராத நிலையில் எப்படி இந்தத் திருட்டுக் கும்பல் திருடி இருக்கும் என்று சந்தேகித்துள்ளனர்.
நூதன திருட்டு முறைகள் பெருகி வரும் நிலையில் இந்த சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை. அனைத்தும் கணினிமயமாகும் பொழுது இது போன்ற நூதன திருட்டு மக்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது.