ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

Photo of author

By Kowsalya

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

உடல் எடை அதிகமாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தடவியல் அதிகாரி கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் மிகவும் சென்னையில் பரபரப்பாகியுள்ளது.

சென்னையில் வடபழனி கருமாரியம்மன் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன், இவரது மனைவி யுவராணி.இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

49 வயது ஆகிய யுவராணி தடவியல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த கணவன் ரகுராமன் அருகிலுள்ள குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

சிகிச்சை பெற்றுவந்த யுவராணி இன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இச்சம்பவம் பற்றி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுவராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் செய்யப்பட்ட விசாரணையில் யுவராணி உடல் எடை அதிகமாக இருந்ததாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், மேலும் குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருந்ததாகவும், இந்த செயலை செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. எனவே தற்கொலைக்கு என்ன காரணம் என்று வடபழனி காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.