மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!

0
160

மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. எங்கு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் அடைபட்டு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் 37 ஆயிரத்து கடந்த நிலையில் இன்று 41 ஆயிரத்து 600 கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

தற்பொழுது ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று ரூ.5199 இன்று ரூ. 9 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5208 வரை விற்கப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து 22 காரட் தங்கத்தின் விலை ரூ.41664 ஆக விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.5468 இருக்கு விற்கப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.43744 ஆக விற்கப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.72.70-விற்க்கும், ஒரு கிலோ ரூ.72,700 க்கும் விற்கப்பட்டு வருகிறது

இந்த நிலை நீடித்தால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது  அரை லட்சதையும் கடக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனாவால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

Previous articleபாஜக வில் இணைகிறார் திமுக வின் முக்கிய புள்ளி!
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் :? சற்று முன் வானிலை மையம் அறிவிப்பு?