தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் :? சற்று முன் வானிலை மையம் அறிவிப்பு?

0
114

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் மேற்கு மலைத் தொடரை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.ஆனால் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் நீலகிரி,தென்காசி,தேனி
நெல்லை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு மலைத் தொடரை ஒட்டி உள்ள நீலகிரிக்கு ரெட்அலர்ட் அறிவித்துள்ளது சென்னை வானிலை மையம்.கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானியில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அவலாஞ்சியில் 22 சென்டிமீட்டர், கூடலூரில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 34 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்ப நிலை பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

author avatar
Pavithra