இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Pavithra

உலகின் பணக்காரன் முதல் ஏழை வரை மனிதர்களாய் பிறந்தவர் அனைவரும் பாடுபடுவது அந்த ஒரு ஜான் வயிற்று உணவுக்கு தான்.ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நாம் எதுக்காக சம்பாதிக்கிறோம் என்பதனை மறந்து விடுகின்றோம்.ஏனெனில் நாம் முறையாக சாப்பிடுவதையே விட்டு விட்டோம் என்றே கூறலாம்.எத்தனை பேருக்கு தெரியும் நாம் உட்கார்ந்து சாப்பிடும் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்று?வாங்க அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1.கிழக்கு திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் நல்ல ஞானம் கிட்டும்.எனவே குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் பொழுது கிழக்கு திசை நோக்கி சாதம் ஊட்டினால் நல்லது.

2.மேற்கு திசை நோக்கி உட்கார்ந்து சாப்பிட்டால் அன்னலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் செல்வம் பெருகும்.

3.வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து சாப்பிட்டால் தீரா நோய்கள் ஏற்படும்,ஏற்கனவே ஏற்பட்ட நோயும் தீராது,எனவே வடக்கு திசை பார்த்து உணவு உண்ணக்கூடாது.

4.தெற்கு திசை நோக்கி உட்கார்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ் கிடைக்கும்.

இந்த திசைகளில் தோஷம் ஒருவர் தனியாக உட்கார்ந்து சாப்பிடும் பொழுது மட்டுமே.இருவர் எதிரெதிராக உட்கார்ந்து சாப்பிடும் பொழுது இந்த தோஷங்கள் இருக்காது.