2500 யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு!!இனி இயங்காது:? காரணம் இதுதான்?

0
73

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உள்ள கூகுள் நிறுவனம் வீடியோ பகிரும் தளமாக விளங்கிய யூடியூபில் இருந்து சீனாவிற்கு சொந்தமான 2500க்கும் மேற்பட்ட சேனலை நீக்கியுள்ளது.தவறான செயல்களை பார்ப்பதாகவும், நாட்டு மக்களின் அமைதியை குழைக்கும் வகையில் அந்த சேனல் அமைவதாகவும், இதற்கான நடவடிக்கை எடுக்கும் விதமாக 2500 சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில் அரசியல் சார்ந்த ஊடகம் மற்றும் தேவையற்ற விவாதங்கள் கொண்ட வீடியோ சேனல் கொண்டுள்ளதால் நீக்கியதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.இது போன்ற செயலில் சீனா இதற்குமுன் ஈடுபட்ட பொழுது கூகுள் நிறுவனம் பல சேனல்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.ஆனால், இதனை சீன நிறுவனம் முற்றிலும் மறுத்துவிட்டது

கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, மக்கள் மனதை மாற்றும் நிலையில் நூற்றுக்கணக்கான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ரஷ்யாவை நடிகர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டது.மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் இதுபோன்ற செயல்களை தடுக்க பல ஆப்ஃகளை உருவாக்கப்பட்டு வருவதாக வல்லுநர்கள் கூறப்படுகிறனர்.

author avatar
Parthipan K