காய்கறி சந்தையை நேரில் ஆய்வு!!

0
105

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தையை ஆட்சியர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கட்டாயமாக அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சார் ஆட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டாட்சியர் பவானி உடன் இருந்தனர். மேலும், இதே போன்று மற்ற காய்கறி சந்தைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார் வைரஸ் தகவலை மேலும் தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleஎட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?
Next articleஇப்படி செய்தால் சாம்பார் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது!!பிரிட்ஜ் தேவை இல்லை!