கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

0
151

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 ஆம் அண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகள் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.மெரினா கடற்கரையின் ஆரம்ப பகுதியிலிருந்து மெளன ஊர்வலமாக வந்து முதலில் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்த சர்வதேச இணைய வழி மாரத்தான் போட்டியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து நடத்தினார்.

கருணாநிதியின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டியை நேற்று மதியம் 12 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிவைத்த மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொள்வதற்காக
kalaignarmarathon.com என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் விவரத்தை பதிவு செய்த பின் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 25 நாட்களுக்குள் எந்த தேதியில் வேண்டுமானாலும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கலாம் என கூறி இருந்தார்.

Previous articleRBI-யின் அதிரடி அறிவிப்பு!!
Next articleஅடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!