ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

0
120

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

மனித உடலில் இருந்து வரும் வியர்வை மூலமாக கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் மோப்ப நாய்களை துபாய் விமான நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதையும் அறிந்த பின்னரே விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு சளி மற்றும் வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை அறியவே மூன்று நாட்கள் ஆகின்றது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா உள்ளதா? என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் முதன்முதலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எப்படி இது சாத்தியம் ? மோப்ப நாய்களால் கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டு வருகிறது.

இதற்கு முன் காசநோய், நீரிழிவு நோய், மலேரியா போன்ற நோய்களை கண்டு பிடித்துள்ளது என நிரூபணம் செய்துள்ளனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல் துறையில் பணியாற்றி வரும் கே-9 என்ற மோப்ப நாய்கள் கொரோனாவை எளிதில் கண்டறியும் திறனைப் பெற்றுள்ளன.

எவ்வாறு கண்டறிகிறது?

1. மோப்ப நாய்கள் கொண்ட ஒரு படை ஒரு தனி அறையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

2. பின்னர் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் இருந்து சளி மாதிரியும், அக்குளில் இருந்து வியர்வை மாதிரியும் சேகரிக்கப்படுகின்றன.

3. பின் அந்த மாதிரிகளை நாய்களுக்கு முன் கொண்டு வைக்கப்படுகின்றன.

4. அந்த மாதிரிகளை மோப்பம் பிடிக்கும் நாய்கள் எந்த பயணிக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்பதை எளிதில் காவலர்களுக்கு காட்டிக் கொடுக்கின்றது.

5. இதை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் ஒரு நிமிடமே எடுத்துக் கொள்கிறது.

6. பின் கொரோனா பாதித்த பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றனர்.

இதுபற்றி துபாய் காவல்துறையை சேர்ந்த மேஜர் சலா அல் மஸ்ரூப் கூறியதாவது,

விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளின் சளி மாதிரிகள் சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் மிகவும் உதவுகின்றனர். மற்றும் மோப்ப நாய்கள் ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிப்பதால் தாமதம் எதுவும் ஏற்படுவதில்லை என்றும் கூறியிருந்தார்.

கே-9 மோப்பநாய்கள் பல துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தப் படைப் பிரிவில் ஜெர்மன் செப்பர்டு, மலினோய்ஸ் போன்ற நாய்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையான நாய்களுக்கு மோப்பம் பிடிக்க 25 கோடி உணரும் செல்கள் மூக்கில் உள்ளது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Previous articleதிமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?
Next articleஇந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா