திமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?

0
174

நேற்று காலையில் வெளிவந்த நாளிதழ் ஒன்றில் பொதுசெயலாளர் பதவி கிடைக்காதால் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார் என்பது போன்ற செய்தி வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவித்த துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலகத்தை உருவாக்க நான் முனைவதுபோல் ஒரு செய்தி வெளியானது இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.திமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?

நான் எம்.எல்.ஏ, எம்.பி அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல,அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.
சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள் எனவே தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.திமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?

இந்நிலையில் இன்று
சென்னை மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார் அங்குள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகள் பற்றிய கேள்விக்கு, அதிமுக ஒரு ஆலமரம் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள்,எம்.எல்.ஏ என யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

திமுகவின் முதல் விக்கெட் கு.க செல்லம் தான்,அவர் பிஜேபி தலைவரை சந்தித்தது உட்கட்சி விவகாரம் அதில் நான் தலையிட விரும்பவில்லை.
துரைமுருகன் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார் ஆனால் பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும் என்று கூறினார்.

திமுகவின் அடுத்த விக்கெட் அவர்தான்! அமைச்சர் ஜெயக்குமார் ! யார் அவர் ?மேலும், அதிமுகவிற்கு துரைமுருகன் வந்தால் அதிமுக நல்ல முடிவு எடுத்து வரவேற்கும் என்றார்.அமைச்சரின் இந்த பதிலால் திமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்
Next articleஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here