கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!
சரக்கு கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கொட்டியதால் மொரிஷியஸ் அதை மீட்க போராடி வருகின்றது.
எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
கடந்த மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடலில் 3800 டன் பெட்ரோலுடன் இந்தியப் பெருங்கடல் தீவான மொரீஷியஸ்க்கு பயணம் செய்துகொண்டிருந்தது.
பாயிண்ட் டி எஸ்னி என்றபகுதியில் எதிர்பாராத விதமாக பாறை மோதி விபத்துக்கு உள்ளாகியது.
அந்த இடம் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.அதே நேரத்தில் கப்பல் பாறையில் மோதியதால் உள்ளே இருந்த பெட்ரோல் குடுவைகள் சேதமடைந்து கசிய தொடங்கியது.
இதை தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் அதனால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் 1000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வரும் காலத்தில் 3800 டன் பெட்ரோலும் கடலில் கலந்து மிக மோசமான நிலையை எட்ட போவதாக வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் கடலில் கசிந்துள்ள பெட்ரோலை நீக்க தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்ஸ் அரசிடம் உதவி கேட்டு மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கசிந்து வரும் பெட்ரோல் மொரீசியசில் கடல் வளத்தை பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மொரிஷியஸ் ஒரு சுற்றுலா தளம் என்பது அனைவருக்கும் தெரியும். அது மிக பழமை வாய்ந்த பவளப்பாறைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது