கள்ளக்குறிச்சியை அடுத்த மண்மலை எனும் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்திற்கு அருகே வன்னியர் சங்கத்தின் அடையாளமாக கருதப்படும் அக்னி கலசம் மற்றும் சிங்கங்களின் உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது.நேற்று மர்ம நபர்கள் சிலரால் இது சேதப்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாமக நிர்வாகிகளும்,
வன்னியர் சங்க நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.இதனையடுத்து பாமக நிறுவுனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்
மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!
மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!#TNPolice #ArrestTheMiscreants
— Dr S RAMADOSS (@drramadoss) August 10, 2020
கொள்கை அடிப்படையில் பா.ம.க.வை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பா.ம.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அக்னிகலசம் சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலச சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்! என்று கூறினார்.