வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

0
141

வரும் மாதம் கல்யாணம்!
புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

திண்டுக்கல் அருகே கல்யாணம் நிச்சயம் ஆன புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அனைவரிடத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த இவர் பெயர் லட்சுமணன். செப்டம்பர் மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அவருக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இவர் அதிகாலையில் எழுந்து தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்தைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது.வேலியின் மேல் சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்தம் காரணமாக மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளன. அதனை பார்க்காமல் வேலியின் அருகே சென்ற லட்சுமணன் கால் எடுத்து வைத்த மறுகணமே தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவே லட்சுமணன் உடலை தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை மனம் குலைய வைத்துள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த போலீசார், லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஉலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்
Next articleகாஷ்மீரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல்