காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு

0
141

புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டத்தின் கீழ், நொய்யல் ஆற்றுக்கு ரூபாய் 230 கோடி அரசு ஒதுக்கியது.இதனால் 18 அணைக்கட்டுகள் ,22 ஏரிகள் தூர் வார படையெடுக்கின்றனர்.அதன் ஒரு கட்டமாக கரையோர பகுதிகளை காங்கிரீட் மயமாக்கல் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தூரங்களுக்கு புதர்கள், பசுமை வாய்ந்த சூழல்கள் இதனால் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி படுகின்றது. பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை அழிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதனால் பறவைகள், விலங்குகள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறினர்.

இயற்கையான சூழலில் இருந்தால் மட்டுமே, பறவைகள் வரும். சாம்பல் கதிர்க்குருவி போன்ற சிறிய பறவைகளுக்கும், நாணல் புற்கள், புதர்கள் கட்டாயம் தேவை. அவற்றை முழுமையாக அகற்றிவிட்டால் பாதிப்பு ஏற்படும்.பட்டை தலை வாத்து என்ற பறவை இமயமலைக்கு அப்பாலிருந்து கோவையில் உள்ள இடத்திற்கு வருகிறது. ஆச்சான்குளக்கரையோரம் உள்ள நாணல் புற்களில் நாணல் கதிர்க்குருவி இனப்பெருக்கும் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வேறெந்த நீர்நிலையிலும் இதை பரவலாக காண முடியாது.

வாத்து இனங்களான செண்டு வாத்து, குள்ளத்தாரா ஆகிய வாத்து இனங்களை வராமல் போகும், ஆச்சான்குளம் போன்ற இடங்களில் மட்டுமே காண முடியும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பூநாரைகள், ஆச்சான்குளத்துக்கு வந்துள்ளன. ஆச்சான்குளத்தில் சாம்பல் நாரையும், வெள்ளலூரில், கூழைக்கடாவும் கூடுவைத்து குஞ்சு பொரித்து வருகின்றன. இது போன்ற இயற்கை சூழலில் வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு காங்கிரட் திட்டங்களை போடுவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோவையில் 700 வருடப் பழமையான இடங்களை காங்கிரிட் மூலம் கட்டுவதால் இயற்கை சூழ்ந்து வாழும் பறவைகள் புழு பூச்சிகள் போன்ற இனத்தை அளித்து வருவது சரியல்ல என்று செயலாளர் கோ .மோகன்ராஜ் கூறினார்.காங்கிரீட் தடங்கள் உருவாக்க பாதிப்பான இடங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.அனைத்து இடத்திலும் காங்கிரீட் தளங்கள் போடாமல் எங்கு மண்சரிவு இருக்கிறதோ அவ்விடத்தில் மட்டுமே காங்கிரீட் தளங்கள் போடுவது அவசியமாக இருக்க வேண்டும் கோ மோகன்ராஜ் அவர்கள் கூறினார்.

Previous articleசுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
Next articleஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!