ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

0
230

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்து உரிமையியல் சம பங்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் 1989ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு சொத்து உரிமையியல் சம பங்கு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இந்த சட்டம் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் அதற்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2005 ஹிந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்து உரிமையியல் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Previous articleகாங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு
Next articleமருத்துவர்கள் பயன்படுத்தும் N95 முகக் கவசத்தை எப்படி தூய்மைப்படுத்துவது? விஞ்ஞானிகள் முடிவு இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here