மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நாகரிக வளர்ச்சியில் ,உலக மூத்த முன்னோடி நாகரீகத்தில் தமிழக நாகரீகமே முதலில் தோன்றியது என்பதற்கு சான்றாக விளங்குகிறது.
பல நாடுகளின் நாகரீகத்தை விட கீழடி அகழ்வாராய்ச்சி உள்ள தமிழர்களின் நாகரீகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தற்பொழுது அகழ்வாராய்ச்சியின் பொழுது தோண்டத் தோண்ட மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொந்தகை பகுதியில் செய்யப்பட சோதனையில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தோடு கீழடி ஆய்வில் மொத்தம் 5 உடல்கள் கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இங்கு ஏற்கனவே 2 குழந்தைகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , மேலும் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.குழந்தைகள் இளம் வயதிலேயே இருந்ததாக கூறியுள்ளனர்.இவர்களின் பாலியல் இதுவரை கண்டுபிடிக்கவில்லை .இவர்களின் வயதைக் கணக்கிடும் வகையில் கார்பன் டெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளது.
கொந்தகை பகுதியில் மனித உடல்கள் அப்படியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.இங்கு கண்டுபிடிக்கபட்ட எலும்புகளின் உயரம் 51/2 உயரமாகவும் மண்ணிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை கார்பன் டெஸ்ட் எடுப்பதன் மூலமாக மனிதர்கள் வாழ்ந்த காலம் மற்றும் அவர்களின் வயதினை கணக்கிட இயலும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.