இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்று அவருடைய மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அவருடைய சகோதரரான கோத்தபய ராஜபக்சே அதிபராக உள்ளார். 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் புதிய அமைச்சரவை குழு பதவி ஏற்றது. நிதி மற்றும் மூன்று முக்கிய துறைகள் மகிந்தா ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் புத்த மத விவகாரத் துறையையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே நீர்பாசனத் துறையில் கேபினட் துறை அமைச்சராக பதவியேற்றுயுள்ளார்.