தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

0
139

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த கொடிய வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா நேற்று முன்தினம் இந்த தொற்றுக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் தடுப்பூசியை உருவாக்கினோம் என்று கூறினர்.

இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என்று பெயர் வைக்கபட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குகிறது என்று பிரதமர் புதின் தெரிவித்துள்ளார். ரஷியாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி உருவாக்கம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து, அறிவியல் உலகில் நிலவுகிறது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனம் பேசும்போது ரஷிய விஞ்ஞானிகளுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம் என்று கூறினர்.

Previous articleபுதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது
Next articleகொரோனா தொற்று உடையவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மாவட்ட தலைவர்..!