1000 நாட்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டம் : மோடி அறிவிப்பு

0
114

இந்தியாவின் 64-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியேற்றினார்.

அப்பொழுது அவர் பேசியவை உரையில் ,கடந்த 2014 முன்னர் நாட்டில் 5 டஜன் பஞ்சாயத்துக்கள் மட்டுமே ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கின் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. அதனை இந்த முறை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி )ஆட்சிக்கு வந்தபின் சுமார் 1.5 லட்சம் பஞ்சாயத்துக்கள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.அடுத்து வரும்1,000 நாட்களில் ( மூன்று வருடங்களுக்குள்) நாட்டில் ஒவ்வொரு கிராமங்களிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் நெட்வொர்க் இணையத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பல வருடங்களாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வரும் நம் நாடு, கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றை அளிக்காமல் காப்பாற்ற தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.இருப்பினும் நம் நாட்டு மக்களின் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் குறைத்து மதிப்பிட்டுவதாக கூறினார். ஆனால் நாம் எந்த பிரச்சினை வந்தாலும் இறுதியாக வெற்றி அடைவோம் என்று கூறினார்.

தற்பொழுது வரை நம் நாட்டில் பிறநாட்டு தேசிய கொடியை பறக்க விடுவதற்கு புதிய இடங்களைத் தேடி வருவோர், தங்களது சாம்ராஜ்யத்தை விரிவாக்க விரும்புவோர், இந்திய நாட்டை குறைவாக மதிப்பிட்டு வருவதாக கூறினர்.இதுவரை இரண்டு உலகப்போர் சந்தித்து வந்த நிலையில் ,வீறுகொண்டு இந்தியா முன்னேறும் என்று கூறினார்.

சுயசார்பு இந்தியா என்பது ஒரு தாரக மந்திரமாக உலக நாடுகளுக்கு முன் விளங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்கு கூறினார்.

Previous articleசிக்கன் சமோசா
Next articleஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது