சிக்கன் சமோசா

0
66

சிக்கன் சமோசா

தேவையான பொருட்கள்

1. மைதா – 1 1/2 கப்

2. உப்பு

3.ஓமம் – 1/2 தேக்கரண்டி

4.நெய் – 3 தேக்கரண்டி

சிக்கன் நிரப்புவதற்கு

1.எண்ணெய் – 3 தேக்கரண்டி

2.வெங்காயம் – 2 நறுக்கியது

3. பச்சை மிளகாய் – 1 .

4.இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி

5.துண்டு துண்தாக வெட்டப்பட்ட சிக்கன் – 200 கிராம்

6. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

7.மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி

8.கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

9.கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி

10. உப்பு

11.சீரக தூள் – 1/2 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

எண்ணெய் வறுத்தெடுக்க.

செய்முறை:

1.சிக்கன் சமோசா செய்வதற்கு முதலில் மாவு தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,உப்பு மற்றும் நெய் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடேறிய பின் அதில் வெட்டிய வெங்காயத்தையும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

3. வெங்காயம் பொன்னிறமானதும் அதில் கொத்துக் கறி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

4. இந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

5. அடுத்து பிசைந்து வைத்த மாவை உருண்டைகளாக பிடித்து நீள்வட்ட வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.

6. சேர்த்து வைத்த மாவை கூம்பு வடிவில் தயார் செய்து கொள்ளவும். ஓரங்களை ஒட்ட தண்ணீரை பயன்படுத்தவும்.

7. அரைத்து வைத்த சிக்கன் கலவையை சமோசாவில் வைத்து மூடவும்.

8. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் சமோசாவை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

9. மிதமான தீயில் போட்டு வறுத்து எடுக்கவும்.

10. சுவையான சிக்கன் சமோசா தயார்.

author avatar
Kowsalya