தேய்க்க வேண்டாம் 30 நிமிடத்தில் கால்மிதி பளிச்சென்று ஆகிவிடும்! ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்!
நாம் வீட்டில் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அதை நாம் கால்மிதி சொல்லலாம். அதில் தான் அதிகமான அழுக்குகள் தங்கி இருக்கும்.
அதை அரை மணி நேரத்தில் அதில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்:
1. பூந்திக்கொட்டை-10
2. ரோஜா -5
பயன்படுத்தும் முறை:
1. முதலில் பூந்திக்கொட்டைய வாங்கிக் கொள்ளுங்கள். இது நுரைப்புத்தன்மை தன்மை அதிகமாக இருப்பதனால் சீயக்காயுடன் இதனை சேர்த்து பயன்படுத்துவார்கள்.
டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும் அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும்.பூந்திக் கொட்டையை எடுத்து அதனை உடைத்து அது கருப்பு நிறத்தில் கொட்டை இருக்கும் அதை நீக்கிவிட்டு மேல் இருக்கும் தோலை மட்டும் எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும்.
2.இப்பொழுது அதனை எடுத்து நசுக்கி பார்த்தால் அதிகமான நுரை வெளிப்படும். இதனுடன் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
3.நன்கு கொதித்து நுரை வெளிப்பட்டவுடன் அதில் ரோஜா இதழ்களை போட வேண்டும் வாசனைக்காக பயன்படுத்தலாம்.
4. இந்தத் தண்ணீரை நீங்கள் பாட்டில்களில் சேமித்து வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இது உங்கள் துணிகளை துவைக்கவும் பயன்படுத்தலாம்.
5. இப்பொழுது ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு இந்த தயாரித்து வைத்த தண்ணீரை ஊற்றி கால் மிதிகளை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
6. அதன் பின் லேசாக தட்டி எடுத்து அலசினால் அனைத்து அழுக்குகளும் நீங்கி விடும். இது அதிகமாக துவைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்த தண்ணீர் அதிலுள்ள அழுக்கைகளை உடனடியாக நீக்கி புதிது போல ஆகிவிடும்.
ஒரு மாதம் வரை இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.