வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: பயிர்கள் சர்வநாசம்!! கலக்கத்தில் விவசாயிகள்..!

0
120

உசிலம்பட்டி அருகே வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மாட்டுத்தீவன பயிர்களை ஆயிரக்கணக்கில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சில வெட்டுக்கிளிகள் மட்டும் தென்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில், தற்போது ஆயிரக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படை எடுத்து வந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து வேளாண் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வெட்டுக்கிளிகளை விரட்ட வேண்டும் எனவும், பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இன்று காலை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பா.நீதிபதி, மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், வேளாண்மை துறை பேராசிரியர்கள், வேளாண்மை துறை ஆராய்ச்சி நிபுணர்கள் செல்வி. உமா மற்றும் அரசு அதிகாரிகள் வருவாய் துறையினர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Previous article2020 கியூஜி என பெயரிடப்பட்ட புதிய விண்கல் பூமிக்கு அருகில் சென்றது :விஞ்ஞானிகள் அறிவிப்பு
Next articleநீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி