நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

0
109

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்திலும் ,உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளது. இதனால் நீட், ஜே இஇ போன்ற மத்திய அரசு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு தயாராகிவரும் 19 வயது இளம்பெண் , தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி , தனியார் நீட் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகிகொண்டிருந்தார்.கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் , இந்த ஆண்டும் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார்.இந்நிலையில்,நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி சுபஸ்ரீ ,தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இவ்விவகாரம் குறித்து ஆர் எஸ் புரம் காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K