மனிதர்களைப் போலவே மீன்பிடிக்கும் புத்திசாலி பறவை! பறவையின் அசத்தும் வீடியோ!
விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவு ஜீவன்கள் ஆக இருந்தாலும் அதன் புத்திசாலித்தனம் மனிதர்களை ஒவ்வொரு நாளும் ஆச்சரியப்பட வைக்கிறது.மனிதர்களைப் போலவே திட்டமிட்டு மீன்களை பிடித்து சாப்பிடும் ஒரு பறவையின் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sci- Nature Hub தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதற்கு ஒரு வரியில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு சிறிய பறவை ஏரிக் கரையின் ஓரத்தில் அமர்ந்து ஒரு சில உணவுகளை தண்ணீரில் போட்டு மீன்கள் வரும்பொழுது அதை எடுத்துக் கொள்கிறது.மீண்டும் அந்த உணவுகளை போட்டு சிறிய மீன் வரும்பொழுது அதை லாவகமாக கவ்வி பிடித்து விடுகிறது.
மனிதர்களைப் போலவே மீன் பிடிக்கும் இந்த புத்திசாலி பறவையின் புத்திசாலித்தனத்தை கண்டு இணையதளத்தில் மக்கள் பலவிதமான கருத்துகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
இதோ உங்கள் பார்வைக்காக கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பறவையும் புத்திசாலித்தனத்தை பாருங்கள்.
https://twitter.com/HubNature/status/1295873199884906496?s=20
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றிருக்கிறது.
Sci- Nature Hub கேட்டுக் கொண்டபடி மக்களும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.